இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தக்கீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8வது மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. UKG ஆசிரியை துஷாரா அனைவரையும் வரவேற்றார். பள்ளி UKG மாணவர்கள் பள்ளிப்பாடலை பரதநாட்டியம் மூலம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
அவர்கள் பல்வேறு பழங்களின் வடிவில் வந்து தங்களைப் பற்றியும் அப்பழங்களின் சிறப்புகள் அதில் உள்ள விட்டமின்கள் பற்றியும் அதனால் நமது உடலுக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றியும் விரிவாக ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் தாமரைக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர். ஸ்டீபனோ ஜோனதன் கலந்து கொண்டு UKG மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தனது சிறப்புரையில் ஆரம்பக் கல்வியை பள்ளியில் கற்றதே தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது என தெரிவித்தார். கல்வியை புகட்டும் ஆசிரியர்கள் மிகவும் மேன்மைக்குரியவர்கள். அவர்கள் தங்களை வருத்தி மாணவர்களை முன்னேற்ற பாடுபடுகிறார்கள். குழந்தை பருவத்திலிருந்தே அடிப்படை கல்வியை நன்கு கற்றால்தான் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். தொழில் துறைக்கான கல்வியை கொடுப்பது ஆரம்பகால அடிப்படை கல்வியே ஆகும் என தெரிவித்தார்.
பள்ளி மாணவிகள் அனிகா ரய்தா மற்றும் செரின் ஆகியோர் விழா தொகுப்புரையை மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். நன்றியுரையை பள்ளி UKG ஆசிரியை சிவபாலா வழங்கினார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












