சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயிலில் நவாஸ்கனி எம்பி ஆய்வு…

இராமநாதபுரம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரையில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் புனித தீர்த்தகரை உள்ளது. இந்த தீர்த்தக்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக தினம் தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளானர். பெண்களுக்கு உடை மாற்றும் அறை, குடிநீர், மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு புதிய கட்டிடம், மேலும் கார்த்திகை மாதம் தொடங்க இருப்பதால் சபரிமலைக்குப் போகும் பக்தர்கள் சேதுக்கரையில் கடலில் நீராடி மாலை அணிவது வழக்கம் எனவே அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து.இன்று ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சேதுக்கரை கடற்கரையை நேரில் பார்வையிட்டார் இதைப்பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் ஆலோசித்து உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!