இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல் நூல் வெளியீட்டு விழா நடந்தது. டாக்டர் ஹாஜி எம்.ஓய்.முகமது சுஹைபு , ஹாஜி முகமது ரபீக் தலைமை வகித்தனர். ஏ.அப்பாஸ் அலி ஆலிம் கிரா அத் ஓதினார். பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் எம்.நஸீர் அலி , பனைக்குளம் முஸ்லீம் நிர்வாக சபை தலைவர் எம்.முகமது சபியுர் ரஹ்மான முன்னிலை வகித்தனர். அ.நசுருதீன் வரவேற்றார்.
தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.ஹாஜா முயீனுத்தீன் பாகவி புத்தகம் வெளியிட்டார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அ அன்வர் ராஜா எம்.பி., ஏற்புரை பேசினார். ஷேக் அப்துல்லா பாகவி ஆலிம் துவா செய்தார். எச்.ஆசிக் கனி நன்றி கூறினார். பனைக்குளம் முஸ்லீம் நிர்வாக சபை உதவி தலைவர் வி.சாதிக் அலி, மண்பம் வட்டார ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் லுத்துபுல்லாஹ், அப்துல் நாஃபிக், பரமக்குடி ஐக்கிய ஜமாத் நிர்வாகி ஏ.ஜே.ஆலிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அன்வர் ராஜா பேசியதாவது: தேர்தல் களத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயம், ஒரு ஜாதி, ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் ஓட்டு போட்டு வெற்றி பெற முடியாது. அனைத்து சமுதாய மக்கள் ஓட்டு போட்டால் தான் ஜெயிக்க முடியும். மோடியை பிரதமர் ஆக்கியதும் அல்லா தான். மோடியால் முத்தலாக் சட்டம் கொண்டு வந்து முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபட வைத்ததும் அல்லா தான். இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கென தனிச் சட்டம் உள்ளது போல், இஸ்லாமியருக்கும் தனி சட்டம் உள்ளது. ஷரீயத்துக்கு எதிரான முத்தலாக் சட்ட மசோதா குறித்து லோக்சபாவில நான் பேசிய கருத்துகள் என் சொந்த கருத்தல்ல. தமிழக அரசின் நிலைப்பாட்டை தான் எடுத்துரைத்தேன். முத்தலாக் மசோதா தொடர்பாக லோக்சபாவில் அன்றைய தினம் கடைசியாக பேசிய ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் கிராம மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால் நகர் மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் செல்வாக்கை இழந்துள்ளீகள். நீங்கள் (பா.ஜ., அரசு ) கொண்டு வந்துள்ள முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. இறைவனுக்கு எதிரானது. இறை தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நான் எடுத்துரைத்த கருத்துகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். என்னை எதிரியாக நினைப்பவர்களுக்கு நான் எதிரி அல்ல. எனக்கு தீங்கு செய்தாலும் எந்த எதிர்வினை நான் செய்தது இல்லை. நான் யாருக்கும் துரோகம் நினைத்ததுமில்லை. நான் யாருக்கும் துரோகம் செய்ததுமில்லை. அரசியலில் என்னுடன் வந்தோர் எல்லாம் போய் விட்டனர். அரசியலில் நான் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறேன். எனக்கு சரியென தோன்றுவதை தான் செய்து வருகிறேன். தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் கிடைத்தாலும் என் வழிகாட்டுதல் இன்றி களப்பணி ஆற்ற முடியாது. இவ்வாறு பேசினார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













