கோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும்போது, நான் ஊராட்சி கூட்டங்களுக்கு செல்லும் போது, தண்ணீர் வரவில்லை, ரோடு சரியில்லை என பல பிரச்சினைகளை அங்குள்ள மக்கள் கூறும்போது, நாம் ஆட்சியில் இல்லை என்பதால், அதிலும் திமுகக்காரர்கள் சொன்னால் செய்ய கூடாது என நினைத்துக் கொண்டிருக்கிற ஆட்சி இங்கு இருப்பதால், நாம் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.
இவையெல்லாம் தீர்க்கப்பட வேண்டும். நாம் தொலைத்திருக்கின்ற மரியாதையை, கௌரவத்தை மக்களிடையே மறுபடியும் பெற வேண்டும் என்றால், திமுக ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும். இனிமேல் எந்த தொகுதியிலும் திமுக தோல்வியை பார்க்க முடியாது, பார்க்க கூடாது என்ற நிலையை நாம் உருவாக்கி காட்ட வேண்டும்.
தலைவர் கருணாநிதி மறைந்தபோது, பேரறிஞர் அண்ணா அருகே அவரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது அவர்கள் நம்மை எந்த அளவுக்கு அலைக்கழித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். முதலமைச்சரை கட்சியின் மூத்த தலைவர்கள், அண்ணன் ஸ்டாலின், குடும்பத்தினர் என பல முறை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகும் அவர்கள் அதை மறுத்து விட்டதால், கோர்ட் வாசலுக்கு ஏறி, நியாயத்தை நீதியை கொண்டு வந்தோம்.
இங்குள்ள அமைச்சர் சொல்கிறார் அதிமுக தந்த பிச்சை தலைவருக்கு இடம் தந்தது. பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கருணாநிதியும் இல்லையென்றால் நீங்கள் இல்லை. தலைவர் போட்ட பிச்சை. திராவிட இயக்கம் போட்ட பிச்சை உங்களை போன்ற ஆட்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதிமுகவில் படித்த அமைச்சர்கள் உள்ளனர். அந்த படிப்பு என்பது தலைவர் கருணாநிதி போட்ட பிச்சை. திராவிட இயக்கம் இல்லையென்றால், மேடையில் ஏறி பேச முடியது. பதவியில் இருக்க முடியாது.
இப்படி பேசக்கூடியவர்களுக்கும், பாடம் புகட்டக்கூடிய தேர்தலாக இந்த தேர்தலை நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் மட்டுமல்ல இது. தமிழ்நாட்டை காப்பாற்ற கூடிய தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு திமுக பதவியில் இருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யால் எந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கூட எடுத்துச் சொல்ல தைரியம் இல்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் நாம் தான் வேட்பாளர் என்று உணர்வோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் பணியை இன்றிலிருந்து தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஒற்றுமையாக திமுக வெற்றி பெற வேண்டும். மத்தியில் பாஜ ஆட்சி, தமிழகத்தில் உள்ள தமிழருக்கு எதிரான ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்ற சூழலோடு நாம் செயல்பட்டால் என்றால் நிச்சயம் 40 நமதே என்ற சரித்தரத்தை மறுபடியும் மெய்ப்பிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









