கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…

கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆரால்வாய்மொழி சந்திப்பில் கழிவறை வசதி வேண்டும் என பொதுமக்கள் H வசந்தகுமார் MP யிடம் கோரிக்கை வைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நவீன கழிப்பறை வசதி கட்ட 9. லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜையை H வசந்தகுமார் MP தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன்,  மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணை தலைவர் ராமமூர்த்தி நகர காங்கிரஸ் தலைவர் நேசமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு முன்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவச்சாரியார் சிறப்பு பூஜைகளை நடத்தினர். பின்னர் அங்கிருந்த கல்வெட்டினையும் திறந்து வைத்து, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி யூனிபாமினையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னால் வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வமணி, ஆரல்வாய்மொழி காங்கிரஸ் பொருளாளர் குமார் ஆரல்வாய்மொழி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வின் மற்றும் ஒப்பந்தகாரர் திருலோகசந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார தலைவர் முருகானந்தம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!