இராமநாதபுரத்தில் எளியோருக்கு முஸ்லிம் லீக் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட ஏழை எளியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி வழங்கினார்.

இது குறித்து நவாஸ்கனி எம்பி கூறுகையில், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கூலித் தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு தேவையாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வழங்கப்பட்டது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான், ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் பி. ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் வருசை முகம்மது, இன்ஜினியர் காதர் மீரான், தொழிலதிபர் எச். காஃபத்துல்லா, அப்துல் ஜப்பார், மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லகான், மாவட்ட துணை செயலர் ஆர்.முகமது யாக்கூப், நகர் தலைவர் எஸ் ஏ சீனி முஹமது, நகர் செயலர் எஸ்.கதியத்துல்லா, மாவட்ட மருத்துவ அணி செயலர் பாக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பேரிடர் காலத்தில் அரசு மட்டுமின்றி தொகுதியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து நம் அருகே உள்ள ஏழை, எளிய குடும்பத்தினருக்கு உதவ முன்வரவேண்டும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!