சென்னையில் இருந்து இன்டிகோ மானம் மூலம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. மாணிக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது அவர் கூறுகையில்:-
*பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்பை மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாத்தது குறித்த கேள்விக்கு*
மத்திய பாதுகாப்பு படை வீரர்களை அண்ணாமலையின் செருப்பை பாதுகாப்பதற்காக பணியமர்த்தியது மிகவும் வருத்தம் மற்றும் வேதனை பட வேண்டிய விஷயமாக உள்ளது, பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லாத அண்ணாமலைக்கு சிஆர்பிஎஃப் Z கேரக்டரி கொடுத்து அமித்ஷா அனுப்பி வைத்த ஒரு விளைவாக அண்ணாமலையின் செருப்பை பாதுகாக்கின்ற வேலையை வழங்கி இருக்கிறார்கள். இந்திய நாட்டு வீரர்களை அவமானப்படுத்தும் அண்ணாமலையும் பாஜகவும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக உள்துறை அமைச்சர் அமைச்சருக்கு இது குறித்து உண்மையை தெரிய வைக்க கடிதம் எழுத இருக்கிறேன்.
*திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக நேற்று நடத்தி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு*
பாஜகவை பொருத்தமட்டிலே மக்கள் கவனத்தை திசை திருப்பவே இதை செய்திருக்கிறார்கள். கேஸ்,பெட்ரோல், வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்பது இது மிகவும் கேளிக்கை கூறிய விஷயமாக இருக்கிறது
*ஜி 20 மாநாட்டில் மல்லி ஜார்ஜ் கார்கே அரசியல் கட்சித் தலைவரை அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு*
கேட்டது கட்சி தலைவரே இல்லை, நாங்கள் எதிர்க்கட்சித் தலைவரை கேட்டோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது பிரதமருக்கு அடுத்து உள்ள பொறுப்பு.
அண்ணாமலைக்கு இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை,அண்ணாமலை ஐபிஎஸ் படித்திருக்கிறார்.
எல்.ஓ.பி நாங்கள் சொல்வது எதிர்க்கட்சி துணை தலைவர் பற்றி தமிழ்நாட்டை பொறுத்த மட்டிலே முதலமைச்சருக்கு அடுத்து lop தான் அதிகாரம் உள்ளது. அண்ணாமலை தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். இது பெரும் வருத்தம் அளிக்கிறது.
*பத்து வருடங்களாக எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் பாரத் எனும் பெயர் மாற்றம் என்று உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு*
உதயநிதியோட பார்வை ரசிக்க கூடியதாக இருந்தது. பத்து வருடங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் தனக்கு முன்னால் இருக்கும் பெயர் பலகையை மாற்றிய மோடியின் சாதனையக பார்க்க வேண்டும். மோடி கருப்பு பணத்தை ஒழிப்போம், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் கொடுப்போம் என்று சொன்னார் எதுவா நடக்கவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது.
*’பாரத் என பெயர் மாற்றத்திற்கு இன்னும் முறையான அரசு ஆணை வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் குறித்த கேள்விக்கு*
அதானி ஊழலை சுப்ரீம் கோர்ட்டில் இருந்தும் மற்றும் சி.பி, டிடி உடைய தலைவராக மாற்றுவதற்காகவும் நடைபெற்ற பிரச்சனை தான் இது, அதானே காப்பாற்றுவதற்காக தான் இந்த பெயர் மாற்றம் இது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்காது.
*திமுக அமைச்சர்கள் மீது அதிமுக தொடர்ந்து வழக்கு தொடரப்பட்ட வருகிறது குறித்த கேள்விக்கு*
ஜனநாயக உரிமை தொடர்ந்து அதை யாரும் அவதூறாக பேசப்படுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வழக்கை சந்திக்கக் கூடியவர்கள், திமுக அமைச்சர்கள் வழக்கை சந்திப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









