பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்கு தள கட்டுமானப்பணி.. நவாஸ் கனி எம்பி நேரில் ஆய்வு ..

இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள், காரைக்கால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது., இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில்  ரூ.70 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டும் தளத்துடன் கூடிய துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி,  மீன்பிடி இறங்கு தளத்தை ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், குந்துகால் மீன்பிடி இறங்கு தளத்தால்  இப்பகுதி மீனவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. மீன்கள் இறங்குமிடம் திறந்தவெளியில் உள்ளதால் அங்கு மேற்கூரை அமைக்க வேண்டும். இரண்டாம் கட்டமாக அமைய உள்ள தூண்டில் வளைவு பாலத்தை முதல் கட்டப்பணியாக நிறைவேற்ற வேண்டும் என்றார். மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக., பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், பாம்பன் ஊராட்சி தலைவர் அகிலா பேட்ரிக், ஒன்றியக்குழு உறுப்பினர் டீரோஸ், ஊராட்சி செயலர் சுல்தான் உள்பட பலர் உடன் சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!