திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் நேற்று நள்ளிரவு திமுக முன்னாள் எம் பி எஸ்.அக்னிராஜு உடல் நலக்குறைவால் காலமானார். இவருடைய வயது 87. பி ஏ பட்டதாரியான இவர் கடந்த 1964 ம் ஆண்டு ஆட்சிமொழி பிரிவு சட்ட நகலை எரித்த மொழிப்போர் தியாகியாக தன்னை அறிமுகம் செய்தவ இவர் திமுக வின் மீது கொண்ட பற்றால் தான் அரசு வேலையை ராஜினாமா செய்தார் பின்னர் 1967 ல் எம் எல் ஏ வாக தேர்வு
செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயலாளராக பணியாற்றினார். மாநில யூனியன் சேர்மன் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவர் 1998 ல் மாநிலங்களவை எம் பி யாக திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் முத்தரசு, செந்தில், கருனாநிதி, சரவணன் ஆகிய நான்கு மகன்களும் உள்ளனர்.
மறைந்த அக்கினி ராஜிவின் நல்லடக்கம் இன்று மாலை 4 மணியளவில் அவருடைய சொந்த கிராமமான கூத்தியார்குண்டுவில் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









