கீழக்கரையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்..

கீழக்கரையில்  சமீப காலமாக பெரியவர் முதல் சிறுவர்கள் வரை டெங்கு மற்றும் பல வகையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.  இது சம்பந்தமாக பொது மக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொசுவைக் கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.  இந்த விவகாரத்தில் வீரியத்த தன்மையை கருத்தில் கொண்டு  நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இணைந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறுகையில் ” கொசுக்களை கட்டுப்படுத்த மதுரை மண்டல அலுவலக பரிந்துரையின் கீழ்  ஊழியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், 20 ஊழியர்களில் இருந்து எண்ணிக்கை 40 பேராகவும்., சுகாதார துறையில் 10 பேர் என உயர்த்தப்பட்டு மொத்தம் 50 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இப்பணியாளர்களை கொசுவை ஒழிக்க தேவையான மருந்து தெளிக்கும் பொருட்களுடன் வீடு வீடாக செல்ல உத்தரவிட்டுள்ளோம்.  ஆனால் பொதுவாக பல இடங்களில் மருந்து தெளிக்க வீடுகளுக்குள் அவர்கள் அனுமதிப்பதில்லை என்பது வருத்தப்படக்கூடிய விசயம்.  இந்த விசத்தன்மை உள்ள கொசுக்களை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.

அதே போல் வரும் ஊழியர்கள் தொடர்நது உபயோகப்படுத்தாத பொருட்கள் மற்றும் ப்ரிட்ஜ் போன்றவற்றில் தேங்கியுள்ள கழிவு நீரை வரும் ஊழியர்கள் பார்வையிட்டு அகற்றி விடுவார்கள். அதே போல் வரக்கூடிய ஊழியர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்து கொள்ள விரும்புபவர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை (ID) வாங்கி சரி பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!