சத்திரக்குடி அருகில் அமைந்துள்ளது முத்துவயல் கிராமம். இக்கிராமத்தில் கிட்டத்தட்ட 20 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளி அமைந்துள்ளது, இப்பள்ளிக்கு அப்துல்மாலிக் என்பவர் தலைவராக இருக்கிறார். இப்பள்ளியில் இஸ்லாமியர்கள் காலம் அடைந்துவிட்டால், அவ்வுடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பெட்டிக்கு அருகில் உள்ள கிராமத்தையே நம்பி இருந்தனர்.
இந்நிலையில் இத்தகவல் கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர் மரைக்கா, அலாவுதீன், கண்மணி சீனி ஆகியோர் கவனத்திற்கு வந்துள்ளது. அப்பள்ளியின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் M.Y ரஃபீக், அலாவுதீன் மற்றும் பசீர் மரைக்கா ஆகியோர் முத்துவயல் கிராமத்தில் உள்ள அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளிக்கு காலமானவர்களை அடக்க ஸ்தலத்திற்கு எடுத்து செல்லும் பெட்டியை பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய வேண்டுகோள்
அதே போல் சத்திரக்குடிக்கும் பரமக்குடிக்கும் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மஞ்சூர் ஜமா அத்துக்கு உட்பட்ட பள்ளிக்கு பல அடிப்படைத் தேவைகளை எதிர்பார்த்துள்ளது, அதற்கான முயற்சியில் கீழக்கரை நகர் நல இயக்கம் பசீர் மரைக்கா அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அனைவரும் இப்பள்ளியினை சிறப்பான முறையில் கட்டி முடிக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.





Seira udhavi veliya theriya kudadhu.