கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை

கீழக்கரையில் கடந்த டிசம்பர் முதலே பனியின் தாக்கம் அதிகரித்து வந்தது. இன்று 21.02.17 காலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கீழக்கரையில் கடும் பனிப் பொழிவு இருந்து வருகிறது. விடிந்தும் கூட, எங்கு பார்த்தாலும் வெண்மையாக காட்சி அளித்தது. பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

காலை 8 மணி வரை பனி அகலாமல் இருந்தது.  இதனால் கீழக்கரையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பொது மக்கள் எப்போதும் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காலை நேரங்களில் கலங்கரை விலக்கம் பகுதிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பனி பொழிவினை இரசித்து புகைப்படங்களை எடுத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!