மொரார்ஜி தேசாய் (மொரார்சி ரன்சோதிசி தேசாய்) பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார்.
1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தேசியவாதிகளின் கருத்தில் என்றும் மறையாதவர் மொரார்ஜி தேசாய்.திறமையான நிர்வாகி நேர்மையாளர்,பம்பாய் மாகாணத்துக்கு முதல்வராக சுதந்திர இந்தியாவில் முடிசூடினார். ஏழைமக்களும் கிராமங்களில் எந்த வசதிகளும் இல்லாதவர்களுக்கு வாழ்க்கையை வாழ அடிப்படை வசதி கிடைக்கும் வரை சோஷியலிசம் குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என்று அவர் நம்பினார். விவசாயிகள் மற்றும் வாடகைதாரர்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான சட்டங்கள கொண்டுவருவதில் திரு. தேசாய் ஆர்வம் காட்டினார். இந்த விஷயத்தில் நாட்டிலுள்ள பிற மாநிலங்களைவிட இந்த அரசு முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டது. பம்பாயின் மரியாதைக்குரிய நிர்வாகத்திற்காக நேர்மையாக அவர் சட்டங்களை இயற்றினார்.
காமராஜரின் கே பிளானில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து மத்திய அமைச்சரவையில் நேருவின் வேண்டுதலுக்கு இணங்க பங்கேற்றார்.பின் இந்திரா காந்தி பிரதமராகிய போது துணை பிரதமராக இயங்கினார் ஆனால் இந்திராவால் அவமானப்பட்டு தன் பதவியை ராஜினமா செய்தார்.இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் (மார்ச் 24, 1977 – ஜூலை 15, 1979) ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர். 1980 க்கு பின் அரசியலை விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கினார். அவரால் இந்த குட்டைக்குள்ளும் சேற்றினுள்ளும் கிடந்துழல முடியாது.இவரெல்லாம் காந்தியோடே செத்திருக்க வேண்டியவர்.ஆனால் அவருடைய இரண்டரை வருட ஆட்சி இன்றும் இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல். கடைசி வரை வாடகை வீட்டிலும் அரசு ஒதுக்கிக் கொடுத்த வீட்டிலுமே வாழ்ந்தார் மூச்சுள்ளவரை காந்தியத்தை கடைபிடித்தார்.மொரார்ஜியை போன்ற தலைவர்கள் உதயமாவதில்தான் பாரதத்தின் ஆன்மா அடங்கியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஏப்ரல் 10,1995ஆம் ஆண்டு, தனது 100ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









