”மூஸா” என்ற இறைத்தூதரின் வரலாறு எழுத்தாளர் ஜெஸிலா பானுவால் எழுதப்பட்டு 09/11/2018 அன்று ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் திரைப்பட இயக்குநர் மற்றும் ரௌதிர பேச்சாளர் கரு.பழனியப்பன் மூலம் வெளியிடப்பட்டது.
பொதுவாக புதிய களம், புதிய கதை, அறியாத விசயங்களை எழுதினால் படிக்கும் வாசகர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். ஆனால் பல்லாயிரம் வருடங்களாக பல அறிஞர்கள் மூலமாகவும், திருமறை மூலமாகவும், பல எழுத்தாளர்கள் மூலமாகவும் படித்து, அறிந்த கதையை லாகவகமாக கையாள்வது என்பது, கயிற்றின் மேல் நடப்பது போலாகும், அதை நூல் ஆசிரியர் மிக கவனமாக கையாண்டுள்ளார். காரணம் சிறிய பிழையும் இந்நூலின் நோக்கத்தையும், வாசகர்களின் கவனத்தையும் மாற்றிவிடும்.
ஆனால் “மாத்தி யோசி” என்ற அடிப்படையில் அனைவருக்கும் அறிந்த விசயத்தை குழந்தைகளும் எளிய முறையில் தெரிந்து கொள்ளும் வகையில் அழகிய, எளிய எழுத்தோட்டத்தில், படிக்க தூண்டும் வகையில் வண்ணமயமான ஓவியங்களுடன் நூல் வடிவமைக்கப்பட்டதில் அதன் நேர்த்தி தெரிகிறது.
”முஸா” நிச்சயமாக சிறுவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட புத்தகம் என்பதில் ஜயமில்லை.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













