புதுப் பொலிவு.. புது நிர்வாகம்.. ஜொலிக்கும் சென்னை மூர் மேன்சன்..

சென்னை மூர் மேன்சன் 90ம் வருட காலங்களில் பல வருட வெளிநாட்டு வாழ்கையை வாழ்ந்து விடுமுறைக்கு வரும் தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயமாக பாலைவனத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு சோலைவனமாக இருந்தது என்றால் மிகையாகாது, அந்த அளவிற்கு அங்கு தங்கும் மக்கள் உபசரிக்கப்பட்டார்கள்.  பின் நாளடைவில் ஏற்பட்ட தொழில் போட்டி, உருவெடுத்த ஆடம்பர தங்கும் விடுதியை நோக்கி மக்கள் சென்றுவிட்டதால், முன்னர் இருந்த களை மாறியது.

இப்பொழுது மீண்டும் நல்ல கூடிய தரத்தில் சேவைகள் வழங்கும் நோக்கில் கீழக்கரையைச் சார்ந்த MMK.முகைதீன் இப்ராஹிம், மூர் மேன்ஷனின் நிர்வாக பொறுப்பை ஏற்று, மேன்சனின் முழு உருவத்தையே புது பொலிவுக்கு கொண்டு வந்துள்ளார்.  இது சம்பந்தமாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரக்கூடிய காலங்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சேவைகள் வழங்கப்படும்.  இங்கு காணப்படும் குறைபாடுகளை சுட்டி காட்டினால், உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

கீழக்கரையில் தரமான கல்விக்கூடம் மூலம் மக்களுக்கு கல்வி வழங்குபவர்கள், இத்துறையிலும் தரம் பேணுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!