கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள் சேர்க்கும் பணியில் களம் இறங்கிய கீழக்கரை முகைதீனியா பள்ளி..

கேரளா மாநிலம் கடந்த இரண்டு வாரங்களாக இயற்கையின் சீற்றத்தினால் 14கும் மேற்பட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கி, அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அம்மக்களின் துயர் துடைக்க உலகம் முழுவதில் இருந்தும் மக்கள் இயன்ற அளவு நிவாரண உதவிகளை செய்தது வருகின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் இழப்பு 1500 கோடிக்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் கீழக்கரை வடக்குத் தெருவில அமைந்துள்ள முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வசூல் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் வளாகத்தில் இன்று முதல் (20/08/2018) தொடங்கியுள்ளனர். இதில வசூல் செய்யப்படும் நிவாரணப் பொருட்கள் பெருநாட்கள் கழிந்தவுடன் பாதிக்ப்பட்ட இடங்களுக்கு நேரடியாக கொண்டு சோ்க்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இத்தொடக்க நிகழ்வில் முகைதீனியா பள்ளி தாளாளர் மௌலா முகைதீன், துணைத் தலைவர் முகைதீன் இபுராஹிம், பொருளாளர் சேகு பசீர் அஹமது, பொறியாளர் கபீர் மற்றும் பள்ளி முதல்வர் முனைவர்.பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!