அபாகஸ் (ABACUS) போட்டியில் அதிக பரிசுகளை வென்று கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சாதனை

கடந்த 01-03-2017 அன்று தொண்டியில் மாவட்ட அளவில் அபாகஸ் – மணிச்சட்டம் (ABACUS) முறை கணித போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து 12 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இந்தப் போட்டியில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பாக கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அதிபட்சமான பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் முதல் பரிசு, சிறந்த போட்டியாளர் பரிசு, பள்ளி அளவிளான முதல் பரிசு, சாதனையாளர் விருது போன்ற அதிகபட்சமான பரிசுகளை வென்று குவித்து சாதனை படைத்துள்ளார்கள்.

பரிசு வென்ற மாணவ, மாணவிகளை கவுரப்படுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் பள்ளி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வடக்குத்தெரு கல்விக் குழு மூத்த உறுப்பினர் அக்பர்கான் தலைமை வகித்தார், இணை செயலாளர்.ரஃபீக், துணை செயலாளர்.அகமது மிர்சா, பொருளாளர்.சேகு பசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தவர்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!