சேதுக்கரையில் நகரும் தன்மை கொண்ட மாடி வீடு சாதித்துக்காட்டிய மனிதர்…

திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட சேதுக்கரை ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் எஸ்.எம்.சாகுல் ஹமீது 67, இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளில் கட்டடத்திற்கு கான்கிரீட் பம்பு செய்யும் பம்ப் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். புதுமை படைக்க வேண்டும், அதே சமயத்தில் நம்பிக்கை தரும் கட்டடமாக எழும்பவேண்டும் என்ற லட்சியக் கனவில் உருவாக்கிய வீடு தான், அஸ்திவாரம் இல்லாத மாடி வீடு.

இதை பற்றி வீட்டின் உரிமையாளர் எஸ்.எம்.சாகுல்ஹமீது கூறுகையில்: கடந்த 22 ஆண்டுகளாக கட்டடங்களுக்கு கான்கிரிட் பம்ப் ஆப்ரேட்டராக துபாய், மலேசியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை செய்துள்ளேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். குஜராத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், இயற்கை பேரழிவுகளால் உருக்குலைந்த வீடுகளை கண்ட எனக்கு, அஸ்திவாரம் இல்லாத (பவுண்டேஷன்) மாடி (1 அடுக்கு) வீட்டினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு இன்றும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. சேதுக்கரை அருகே கொட்டகுடி ஆற்றின் அருகில் உள்ள சதுப்பு நிலத்தரையால் சூழப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாடிவீடு எழுப்பவேண்டுமென்றால் 6 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு, அதிலிருந்து கட்டடம் எழுப்பப்படும் இது பொதுவான விதி. நான் எழுப்பிய கட்டடத்தில் தரைத்தளத்தில் இருந்து 36க்கு 30 சதுரடி அளவில் 1 மீட்டர் உயரத்தில் கான்கிரிட் மேடை தளம் அமைத்து, அதன்மேல் 12 துõண்கள் (பில்லர்கள்) எழுப்பி 10 அடி உயரமும், மேல்தளம் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 பெட்ரூம், 1 ஹால், வரவேற்பரை, சமையலறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.20 லட்சம் மட்டுமே செலவானது. சாதாரண கட்டுமான வீடுகளுக்கு ரூ.32 லட்சம் வரை செலவாகும். வருடம் ஒருமுறை பெயிண்டிங் செய்து பராமரிக்கிறேன்.

இதன் சிறப்பம்சம் : கட்டடத்தில் தரையில் இருந்து 1 மீட்டருக்கு பின் அடிப்பகுதியில் தொழில்நுட்ப உதவியுடன் சுழலும் உருளை சிலிண்டர்கள் மூலம் 360 டிகிரியில் எந்தப்பகுதியிலும் திருப்பிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் பல அடி துõரம் வரை தள்ளிவைத்துக் கொள்ளலாம். பரிச்சார்த்த முயற்சியான கட்டடத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது என்பதை எனது அனுபவ அறிவால் உணர்கிறேன். பிறர் என்னை கேலியும், கிண்டலும் செய்தாலும் அதை பொருட்படுத்தவில்லை. கட்டட கலைக்கு விடுக்கப்பட்ட சவாலாக உணர்கிறேன். பூமித்தட்டு ஒன்றொடென்று உரசும் போது ஏற்படுவது நிலநடுக்கம், அதையும் தாங்கும் வல்லமை இதற்கு உண்டு என்று கருதுகிறேன் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!