டெல்லி அரசு திட்டங்களின் செயல்பாடுகளை மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்-சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

டெல்லியில் அரசு திட்டங்களின் நகர்வுகளை மக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் பொருட்டு அலைபேசி செயலியை (Mobile App) உருவாக்க ஆம் ஆத்மி கட்சி அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர் வரும் அக்டோபர் முதல் மக்கள் நல பணிகள்,ஊரக வளர்ச்சி திட்டங்கள் போன்ற செயல்பாடுகளை மொபைல் ஆப் மூலம் தெறிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அரசு அறிவித்த திட்டங்கள் சம்பந்தமான் தகவல்களை ஆன் லைனில் பொது தளத்தில் பதிவு செய்வதன் மூலம் டெல்லி அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். இந்த மொபைல் செயலியின் பெயரை விரைவில் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக அரசு செயல்பாடுகளின் நிலைமைகளை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டம் வாயிலாக கேள்விகளை எழுப்பி தகவல்களை பெற்று வந்த நிலையில் இது போன்ற செயலிகள் பொது மக்களுக்கு வேலையை சுலபமாக்கி உள்ளது என்றும் அரசின் மீது நம்பகத்தன்மை  அதிகரிக்கும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!