இதுக்காத்தான் தான் டிவி ரிமோட் உடைத்தேன்!-புது விளக்கம் கொடுத்த மநீம தலைவர் கமல்ஹாசன்..

தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மக்களவை தொகுதி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் 29-ந்தேதி பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.கவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து பேசினார். கமல்ஹாசன் பிரசார விளம்பர வீடியோவில், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டை வைத்து உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது, அந்தக் கூட்டணியில் சேர்ந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.இந்நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்; இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள் அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன். நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை.நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை..வியூகம். தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி; நமது ரிமோட். அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்க்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்ஒரு தொகுதி, 2 தொகுதி என இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் என்னால் பிரச்சாரம் செய்ய முடியும். மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன். பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால் அவருக்கு தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். என் அரசியல் எதிரி சாதியம்தான். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சாதியம் தான் எதிரி. 70 ஆண்டுகளுக்கு முந்தைய சாதியத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!