கீழக்கரையின் போராளி “MMK” பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்.. குடும்பத்தினர் கண்டனம்…

கீழக்கரையின் போராளி “MMK” என்றால் மிகையாகாது.  அந்த அளவிற்கு போராட்ட குணத்துடன், கீழக்கரை நலன் கருதி பல நன்செயல்களை செய்துள்ளார்.  உதாரணமாக கீழக்கரையின் நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வந்த ஊர்வலத்தை நீதிமன்றம் வரை சென்று முற்று புள்ளி வைக்க பாடுபட்டவர்.  அநீதியான காரியங்கள் எங்கு நடைபெற்றாலும் தயங்காமல் தட்டி கேட்க தயங்காதவர்.  முத்தரப்பு ஒப்பந்தம் வரைவு செய்வதில் கை தேர்ந்தவர். கீழக்கரையில் கல்வி கூடத்தின் அவசியத்தை உணர்ந்து கல்வி கூடங்களை ஆரம்பித்து மக்கள் மத்தியில் கல்வி அறிவு வளர பாடுபட்டவர்.  ஏகத்துவம் என்பதை எந்த அமைப்பும் எடுத்து கூறாத காலத்திலேயே கொள்கையாக கொண்டவர்.  இந்நிலையில் அவருடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடைய பெயரில் இன்னிசை கச்சேரி நடைபெறுவதாக நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவரது மகன் எம்.எம்.கே ஜமால். வெளியிட்டுள்ள அறிக்கையில்’  “எனது தகப்பனார் MMK.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் இல்லை என்றாலும் அவர் ஒரு நாளும் தர்ஹாவின் வாசல் படி மிதித்தது கிடையாது.

என்னையும் தர்ஹா ஒரு ஷிர்க் அதை விட்டு விலகியே இருக்கும் படி அறிவுறுத்துவார். எனது தந்தை பேச்சை கேட்டு இது நாள் வரை இறைவன் அருளால் தர்ஹா எனும் ஷிர்க்கினில் விழாமல் இருந்துவருகின்றோம்.

இக்கட்டான சூழ்நிலையில் பல எதிர்ப்புகளையும் மீறி தவ்ஹீத் ஜமாத் தலைவர் PJ உறையாற்ற கீழக்கரையில் முதல் முதலில் இடம் கொடுத்தவர் எனது தந்தை, அந்த அளவிற்கு தர்ஹா கொள்கையை எதிர்த்து வந்தவர்.

இன்னிலையில் கீழக்கரையில் தர்ஹா எனும் ஷிர்க்குக்கு ஹாராமான இன்னிசைக்கு வரவேற்று எனது தந்தை விலாசத்தை (MMK) பயனடுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கின்றது

இது என் தந்தையின் தர்ஹா எதிர்ப்பு கொள்கைக்கு முற்றிலும் எதிரான ஒன்று. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கும் காலம் சென்ற என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

இருக்கும் போது தான் அவருக்கு மன வேதனை கொடுத்தீர்கள் இறந்தும் கூடவா அவருக்கு மன வேதனை கொடுக்க வேண்டும்.” என வெளியிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “கீழக்கரையின் போராளி “MMK” பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்.. குடும்பத்தினர் கண்டனம்…

  1. MMK குரூப் உலகத்தில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த போஸ்டர் கீழக்கரை MMK குரூப் என்று விளம்பரபடுத்தவில்லை இது தவறான செய்தி MMK குடும்பத்தார் இதற்கு கண்டனம் தெரிவிக்க அவசியமில்லை. இது முற்றிலும் கீழக்கரைக்கு அப்பாற்பட்ட விளம்பரம்.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!