மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தில் தமிழக அரசு பார்வையற்ற குடும்பங்களுக்கு பட்டா நிலங்கள் வழங்கியுள்ளது.அந்த நிலங்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்காக மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மற்றும் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பாக வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டு ரூ 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்காக சக்கிமங்கலம் கிராமத்தில் கால்கோள் நடும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஸ்டார் ரோட்டரி சங்க தலைவர் கார்மேகம் தலைமை தாங்கினார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் எஸ்.எல் சேது மாதவா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக 21 – 22 ஆம் ஆண்டிற்கான ஆளுனர் ஆர்.ஜெய்க்கன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.,இந்நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆர் .சண்முகசுந்தரம் ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுந்தரவேல் உதவி ஆளுநர் தேவசேனா முரளி, திட்ட பொறியாளர் சுந்தர்ராஜன் பொறியாளர் முருகேசன் ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் அயூப்கான் பிரபு கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.,ஏற்கனவே பார்வையற்ற மாற்றுத்திறனாளி குடும்பங்கள் தங்கும் வசதிக்காக ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் 30 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.