மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட T.மணல்மேடு ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் எம்.எ.ஏ.பவுன்ராஜ் புதன்கிழமை வழங்கினார்.T.மணல்மேடு ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.
இதில் விசுவநாத குருக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் திலகவதி துரைராஜன், அதிமுக பிரமுகர் சங்கர் அய்யர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





You must be logged in to post a comment.