ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் கலையனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இராமநாதபுரம் ஒன்றிய திண்ணைதிட்ட பொறுப்பாளர் ஆசிரியர் பிரீத்தி தலைமை தாங்கினார்.இந்நிகழ்வை இராமநாதபுரம் ஒன்றிய தாய்மண் திட்ட பொறுப்பார் குருநாதன் , ஒன்றிய தகவல்தொழில்நுட்ப பொறுப்பாளர் பாலமுத்து ஆகியோர் எற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் திடல் திட்ட பொறுப்பாளர் முகேஷ் குமார், சூரியா, மக்கள் பாதை தன்னார்வலர்கள் திண்ணைபள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் ஆதி கூறியதாவது, தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.இன்று மக்கள் பாதை அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது என்று கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!