இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக அப்துல் கலாம் ஐயா 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இணைய வழி கருத்தரங்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ராமு வரவேற்று தொகுத்து வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இணை ஒருங்கிணைப்பாளர் இராவணன் குமார் மக்கள் பாதை இயக்கத்தின் செயல்பாடுகளை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார்.மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன் கலாம் ஐயா அவர்களின் பிறந்த, நினைவு நாளில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதையின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்தார். சரவணக்குமார் மக்கள் பாதையின் கடந்த கால செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். கிளாட்வின் சகாயம் ஐயா அவர்களின் நேர்மையான செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் பிரசாந்த்,தினேஷ், வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவாடானை ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் சரவணன் , மாவட்ட தமிழுக்கும் அமுதென்று பேர் திட்ட பொறுப்பாளர் மூவிந்தராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர்களாக இன்றைய இந்தியாவும் கலாமின் கனவும் என்ற தலைப்பில் கம்பன் கழகம் துணை தலைவர் தமிழரசி உதயகுமார் மிகச் சிறப்பாக தனது சிறப்புரையை ஆற்றினார்.கலாம் ஐயா அவர்களின் வழியில் இளைஞர்கள் செய்ய வேண்டியவை என்ன என்பதை பற்றி கலாம் மாணவர்கள் இயக்க தலைவர் விஜயேந்திர ராஜா மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.கலாம் ஐயாவின் கனவுகளில் இளைஞர்களின் பங்கை பற்றி தன்னார்வலர்கள் இல்லம் மாநில செயலாளர் தனிமரக்காடு சம்பத் குமார் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.தங்கச்சிமடம் ஊராட்சி பொறுப்பாளர் அந்தோணி தீனா நன்றியுரை கூறினார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை பொறுப்பாளர்கள், ஒன்றிய, மாவட்ட திட்ட பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் ,சமூக ஆர்வலர்கள் ஆகியோர்் இணைய வழி கருத்தரங்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.