கார்கில் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் கலையனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இராமநாதபுரம் ஒன்றிய திடல் திட்ட பொறுப்பாளர் முகேஷ் குமார் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வை இராமநாதபுரம் ஒன்றிய தாய்மண் திட்ட பொறுப்பார் குருநாதன் , திண்ணைதிட்ட பொறுப்பாளர் பாலமுத்து ஆகியோர் எற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் மக்கள் பாதை தன்னார்வலர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் ஆதி கூறியதாவது, இந்திய இராணுவத்தின் உறுதியையும், வலிமையையும் ஒருசேர உலகிற்கு பறைசாற்றிய தருணம் கார்க்கில் போர் என்றால் அதை எவராலும் மறுக்கவும் முடியாது,மறைக்கவும் முடியாது. நமது நாட்டுக்காக எத்தனையோ வீரர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்த நாளில் அவர்களை நினைவு கூர்வது நமது தலையாய கடமை. கார்கில் போரில் வீரமரணமடைந்த இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக இன்று மக்கள் பாதை அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது என்று கூறினார்.





You must be logged in to post a comment.