இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் பனை விதை விதைப்பு திருவிழா இராமநாதபுரம் ஒன்றியம் பெருவயல் ஊரணி கரைகளில் மேற்கொள்ளப்பட்டது.இராமநாதபுரம் ஒன்றியம் மக்கள் பாதை தாய்மண் திட்ட பொறுப்பாளர் குருநாதன் தலைமை தாங்கி பனை விதை விதைப்பு திருவிழாவை தொடங்கி வைத்தார். மேலும் பனை சார்ந்த பொருளாதாரம் பற்றியும் , நமது மாவட்டத்தில் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.
திண்ணைதிட்ட பொறுப்பாளர்கள் பிரீத்தி,பாலமுத்து முன்னிலை வகித்து நெகிழியின் தீமைகள் பற்றியும், குளங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.ஊரணிகரையை சுற்றியுள்ள சீமை கருவேல மரங்கள் சிலவற்றையும், நெகிழிகளையும் சுத்தம் செய்து பின்னர் பனை விதைகள் விதைக்கப்பட்டன.கலையனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், ஆசிரியர்கள் ,பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





You must be logged in to post a comment.