குழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்பத்தில் மிகக்குறைவாக இருந்த கொரோனா தொற்று தற்போது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதியுடன் எடுப்பதோடு, மக்களும் விழிப்புணர்வுடன் நடந்தால் மட்டுமே பாதிப்பையும், உயிரிழப்புகளையும் இனி வரும் நாட்களில் குறைக்க முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறுகையில், தனிமைப்படுத்துதல் தேவை தான், ஆனால் குழந்தைகளுக்கு அது பெரும் சிறையாக இருக்கிறது. இது போன்ற ஊரடங்கு நாட்களில் அவர்களை கண்காணித்து வருவதும் அவசியமானது. அதனடிப்படையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் குழந்தைகளால் வரைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இராஜசிங்கமங்கலம் பகுதிகளைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் யாமீன் அஹமது, நூருல் பத்ரான், ஹசின் பாத்திமா, முஹம்மது ஆசிம் ரஹ்மான் ஆகியோர் தங்களது திறமைகளை பெற்றோர் உதவியுடன் வெளிப்படுத்தினார்கள்.மேலும் பொதுமக்கள் முகக்கவசம் பயன்படுத்துவது, சானிடைசர் உபயோகிப்பது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, கையுறை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!