மக்கள் பாதை சார்பாக வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கல்.

இராஜசிங்கமங்கலம் அருகே உப்பூர் அனல் மின் நிலையத்தில் வேலை செய்கின்ற வட மாநில தொழிலாளர்கள் இராமநாதபுரத்திலிருந்து ரயிலில் தங்களது சொந்த ஊரான ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்கள். ஆகையால் தற்காலிகமாக தற்போது அவர்கள் இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் வட மாநில தொழிலாளர்கள் 60 நபர்களுக்கு காலை மக்கள் பாதை சார்பாக உணவு வழங்கபட்டது.கொரோனா பேரிடர் காரணமாக வீட்டு வாடகை வேண்டாம் என்று வீட்டின் உரிமையாளர் ஆசிக் ரியாஸ் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த பணத்தை வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு மக்கள் பாதை சார்பாக உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள் பாதை இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா , வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் பொய்யாமொழி, கந்தபாண்டி, முருகபிச்சை, ஈஸ்வரன், இராமசந்திரன், செல்லதுரை குமார், அருணாச்சலம், அழகு ஆகியோர் கலந்து கொண்டு உணவை வழங்கினார்கள்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!