மீன்பிடி தடைகாலத்தை குறைக்க மக்கள் பாதை சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு:

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடலுக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், மீன்களின் இனப்பெருக்கத்தை கணக்கில் கொண்டு, ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன், 14ம் தேதி வரை, 61 நாட்கள் மீன் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது.இந்நிலையில், ஏற்கனவே மீனவர்கள், 21 நாட்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் சிரமப்படும் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்து 61 நாட்கள் தடை காலத்தை, 40 நாட்களாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் இராமு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இணையதளத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!