நெல்லை மாவட்டத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மஜக மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், பாளையங்கோட்டை சேர்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடை அணிந்த மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே மது அருந்தக்கூடிய காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது, இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டான பாளையங்கோட்டை பகுதியில், இவ்வாறான ஒழுக்கக் கேடான செயல்பாடுகள் ஏற்புடையதல்ல, விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு மது எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களுக்கு மது கிடைப்பதற்கு வழிவகை செய்தவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகம், பள்ளி வளாகம் விடுதி பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தவறான பழக்க வழக்கத்திற்கு ஆட்பட்ட பதின்பருவ பிள்ளைகள் மீது அவர்களுடைய கல்வி எதிர்காலம் குறித்து கவனத்தில் கொண்டு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் கல்வி பயிலும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கஞ்சா உள்ளிட்ட மலிவான போதைப் பொருட்கள் மாணவர்கள், இளைஞர்கள், மத்தியில் எளிய முறையில் கிடைப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது. மாநகர் பகுதியில் பரவலாக மாணவர்கள் இளைஞர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் போதை பயன்பாடுகள் உள்ளது. இதனை காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். எதிர்கால இளைய தலை முறையின் ஆற்றல் வீணடிக்கப்படாமல் இருக்க, இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், அவர்களுக்கு பின்புலமாக இருக்கும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களையும் அடையாளம் கண்டு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.
மனு அளிக்கும் நிகழ்வில், மஜக இளைஞரணி அஷ்ரப், மாவட்ட துணை செயலாளர்கள் முருகேசன், 50-வது வார்டு முகமது இஸ்மாயில், பாளை பகுதி தமிம் அன்சாரி, தொழிற்சங்க நிர்வாகி சிதம்பரம், மேலப்பாளையம் பகுதி காஜா நிஜாம், தமிம் அன்சாரி (பொருளாளர்), சேக் உசேன் (இளைஞர் அணி செயலாளர்), சிந்தா துணை செயலாளர் , மஸ்தான் (வர்த்தக அணி செயலாளர்), காஜா நிஜாமுதீன் பகுதி செயலாளர்), முஹம்மது ஷாபி உஸ்மானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.