மஜக பொதுச் செயலாளரும் எம். எல். ஏ. வுமான தமீமுன் அன்சாரி தனது இல்லத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இன்று நாகை மாவட்டம் தோப்புத்துறையில், தனது வீட்டில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி இருக்கும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, கேளாம்பாக்கம் முகாமில் உள்ள நெகடிவ் ரிசல்ட் பெற்றவர்களை வீட்டிற்கு அனுப்பிட வேண்டும் என்றும், அங்கு அவர்களது வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துருப்பாதாகவும் அதுவரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

மேலும் பத்திரிக்கையாளரிடம் பேசும்போது தாசில்தாரின் கவனக்குறைவு தான் கேளாம்பாக்கத்தில் இரண்டு மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

தமிழர்கள் தாயகம் திரும்ப கூடுதலான விமான சேவையை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நெருக்கடியான நேரத்தில் சொந்த செலவில் தாயகம் திரும்புவர்களிடம் சிகிச்சைக்கு கட்டணம் கேட்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

வெளிநாடுலிருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை மூன்று நாட்கள் முகாமில் வைத்து, ஆய்வில் அவர்களுக்கு நெகடிவ் என்று வந்தால் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்து அங்கு தனிமைப்படுத்த வேண்டும், இதன் மூலம் அரசுக்கும் செலவு குறையும் தேவையற்ற பிரச்சனைகளும் இருக்காது என்றார்.

இப்பிரச்சனைகளை கையாள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான வாரியத்தை உயிரூட்டி ஒரு IAS அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், இதற்கு தற்காலியமாக ஒரு அமைச்சரையும் நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தற்பொழுது அவர் காத்திருப்பு போராட்டத்தில் இருக்கும் நிலையில், தமிழகத்தை தாண்டியும் வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் கொந்தளிப்பு உருவாகி இருக்கிறது.

தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கண்ணீர் மல்க கோரிக்கைகளை விடுத்து வருக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!