சேதுக்கரையில் வளர்ந்து நிற்கும் மிஸ்வாக் மரம்…

அரபு தேசங்களில் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மருத்துவ குணம் கொண்ட மரக்குச்சி மிஸ்வாக் குச்சி ஆகும். அரபு நாடுகளில் பொதுவாக அனைத்து தொழுகைப் பள்ளிகளில் பல்துலக்கும் குச்சியாக விற்பதை காண முடியும். மேலும் இந்த ஆரோக்கியம் மிகுந்த மிஸ்வாக் குச்சியை வைத்து பல் துலக்குவது, அப்பகுதியில் உள்ள ஒரு கலாச்சார செயலாக காண முடியும்.

அத்தகைய மருத்துவ குணமுடைய மிஸ்வாக் மரம், இராமநாதபுரம் சேதுக்கரையில் 35 வருட காலமாக யார் கண்ணிலும் படாமல் இன்று வளர்ந்து பரந்து கிடப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இம்மரத்தின் குச்சிகளை வைத்து பல் துலக்கினால் பல் சம்பந்தமான பல் வலி, வாய் துர்நாற்றம், பல் சிதைவு போன்ற நோய்கள் நீங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தக் குச்சியின் பெயரில் பல் துலக்கும் பேஸ்டுகள் சந்தையில் விற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்சமயம் சதுப்பு நிலப்பகுதியான சேதுக்கரையில் வளர்ந்து நிற்கும் மரத்தை வேளான்மை துறையினர் ஆய்வு செய்து மேலும் பல மிஸ்வாக் மரங்களை நட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இம்மரங்கள் இராமநாதபுர மாவட்டத்தில் வேறு எங்கும் இருப்பதாக அறியமுடியவில்லை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “சேதுக்கரையில் வளர்ந்து நிற்கும் மிஸ்வாக் மரம்…

  1. பயனுள்ள தகவல். மேலும் இதை மற்ற இடங்களிலும் வளர வழி செய்ய வேண்டும்.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!