திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், போலி ஜமாத் பெயரின் பேரில், திருமணம் பதிவு செய்வதற்காக நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த, நிலக்கோட்டை ஜமாத்தார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த முறை கேட்டில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், மற்றும் மணமக்கள், சாட்சிகள், ஆகியோர் மீது புகார் அளிக்க உள்ளதாக சார்பதிவாளர் சதாசிவம் பேட்டி. நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 27-08-2018 அன்று இளையான்குடியை சேர்ந்த பாசித் ரஹ்மான் சாஜிதா பேகம் ஆகிய இருவரின் சார்பாக, அஹ்லுல் சுன்னா தவ்ஹீத் ஜமாத் என்ற போலியான ஜமாத்தின் பெயரில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்திருக்கிறார்.
இதனை அறிந்த நிலக்கோட்டை ஜமாத்தின் நிர்வாகிகள் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சதாசிவம் அவர்களிடம் முறையிட்டனர், இதனை அடுத்து போலி ஆவணங்களை கொடுத்த மணமக்கள், வழக்கறிஞர், சாட்சிகள் ஆகியோர் மீது முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என சார்பதிவாளர் உறுதி அளித்தார்,
மேலும் இவர்கள் மீது முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, சார்பதிவாளர், மாவட்டம் காவல் கண்காணிப்பாளர், பார் கவுன்சில், பத்திர பதிவு துறை இயக்குநர், ஆகியோருக்கும் நிலக்கோட்டை ஜமாத்தின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது,
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









