சினிமா பாடலுக்கு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடமாடிய போதை ஆசாமி..வீடியோ பதிவு..

மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள டவுன்ஹால் ரோடு, வணிக வளாகங்கள் நிறைந்து காணப்படும் இடமாக திகழ்கிறது. குறிப்பாக, உலகப்புகழ்பெற்ற ஆன்மீக தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை என்பதால் , ரயில் நிலையங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அவ் வழியே கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில்,  ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டவுன்ஹால் பகுதியில் உள்ள ஆட்டோ நிலையத்தில் ஒலிபெருக்கியில் பாடல்கள் இசைக்கப்பட்டது. அதற்கு அங்கிருந்த போதை ஆசாமி ஒருவர் மற்றும் ஓர் இளைஞன் அவ்வழியே செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகள், பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் முகம் சுழிக்கும் விதத்தில் தரக்குறைவாக பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!