நெடுஞ்சாலையில் நெகிழ வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரின் மனித நேய செயல் – வீடியோ பதிவு..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 7.30 மணி அளவில் ஒரு காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நசுங்கி காரில் சென்றவர்கள் படுகாயத்துடன் காருக்குள் துடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது காரில் இருந்து இறங்கி தனக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் இணைந்து விபத்தில் சிக்கிய கார் கதவுகளை உடைத்து படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த மனித நேய செயல் நிச்சயமாக பாராட்டுகுரியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!