தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி அதனை சுற்றியுள்ள 175 கிராமங்களுக்கு தடையின்றி நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது – மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் திரு.உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ ஆகியோர் தகவல்.
அண்மையில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 175 கிராமங்களில் 10 சுனாமி மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பொதுவான முகாம்கள் 34 உள்ளது. 18 கிராமங்கள் கடலோர கிராமங்களாக அமைந்துள்ளது. இதில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களான பாதுகாக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட் பாக்கெட், பால்பவுடர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தடையின்றி உணவு வழங்கிட அரிசி, பருப்பு, காய்கறி போன்ற உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு தேவையான உணவுகள் தயாரிக்கப்பட்டு முகாம்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் தேவைப்பட்டால் அதற்கான உணவு பொருட்கள் உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாகவும் தொடர்ந்து தடையின்றி வழங்கப்படும். உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் விநியோகிக்கும் பணியில் காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தார்கள்.
பிற மாவட்டகளிலிருந்து வந்துள்ள மின் பணியாளர்கள் மின் விநியோகம் செய்வதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. கிராமத்திலுள்ள பொதுமக்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து இயற்கை சீற்றத்திலிருந்து நமது மாவட்டத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய உதவிட வேண்டும். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பணிவுடன் அமைச்சர் பெருமக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அனைத்து மீட்பு பணிகளில் மாண்புமிகு அமைச்சர்கள் அந்நதந்த பகுதிகளில் முகாமிட்டு பணிகளை துரிதபடுத்தி கொண்டு இருக்கிறார்கள். எனவேää பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் பெருமக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
முன்னதாக பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிவாரணப்பணிகளை துரிதபடுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டத்தில், காவல்துறைத்தலைவர் திரு.வரதராஜன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சக்திவேல், டி.ஆர்.ஒ திருமதி.பிரியா, சார் ஆட்சியர் திருமதி.சாரு ஸ்ரீ இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் இ.கா.ப., உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











