இராமநாதபுரத்தில் அதிமுக 47ம் ஆண்டு நிறுவன நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது : திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம் ஜி ஆர் 1972 அக்.17 இல் அதிமுகவை நிறுவினார். உலகத்திலேயே கட்சி துவங்கியதும் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே. 1972 முதல் 10 பொதுத் தேர்தல்களில் 7 தேர்தல்களில் வென்ற ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். எம் ஜி ஆர் காலத்தில் திமுகவால் ஆட்சிக்கு வர இயலவில்லை.
பின்னர் எம் ஜி ஆர் மறைவுக்கு பின் திமுக மூன்று முறை ஆட்சி பிடித்துள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37 இடங்கள் வென்றுள்ளது . மேலும் 11 ராஜ்ய சபா உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுக . திமுகவின் தோல்வி எப்போதே எழுதப்பட்டு விட்டது. தமிழகத்தில் அதிமுக யுடன் எந்த கட்சியுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ராமநாதபுரத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் 98 சதவீத வெற்றி பெற்று திமுகவிற்கு பூஜ்யத்தை பரிசாக தந்துள்ளோம். அவர்கள் இனிமேல் எக்காலத்திலும் வெற்றி பெற முடியாது. திமுக ஆட்சிக்கு வருவதற்கான யோக ஜாதகம் இல்லை. திமுகவிற்கு குழிதோண்ட அழகிரி, கனிமொழி உடன் இருக்கின்றனர். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னரும் கூட அதிமுகவை யாராலும் அசைக்க முடியவில்லை. ஸ்டாலின், டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என இருவருமே முதல்வர் பதவி கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். டிடிவி தினகரனிடம் முதிர்ச்சி இல்லை. பொறுமை கிடையாது. உங்களால் முடிந்தால் திமுகவை வசைபாடுங்கள். அதிமுக அரசு மீது ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார். நாங்கள் நினைத்தால் திமுக மீது வழக்குகள் போட முடியும் .எங்களிடம் பழி வாங்கும் போக்கில்லை. நான்கு சதவீத தொண்டர்கள் டிடிவி தினகரன் அணியில் உள்ளனர். டிடிவி தினகரன் அணியில் உள்ளவர்கள் அதிமுக வந்து விடுங்கள். அங்கு உங்களுக்கு நல்ல வாழ்வு கிடையாது. உங்களுக்கு மானம், ரோசம் இருந்தால் அதிமுக கரை வேட்டியை உடுத்தாதீர்கள் . நாங்கள் வாந்தி எடுத்ததை நீங்கள் அள்ளி சாப்பிடாதீர்கள்.
தினம் ஒரு பெண்களுடன் சுற்றித்திரியும் கமலஹாசன் பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும். ட்விட்டர் அரசியல் செய்யும் கமல்ஹாசன், கவுன்சிலர் தேர்தலில் கூட அவரால் ஜெயிக்க முடியாது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி பேச கமல்ஹாசன் அருகதையற்றவர். அதிமுகவை விமர்சிக்கும் கமல் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? எனது கோரிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். அதன்படி ராமநாதபுரத்திற்கு விமான நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்ற உறுதி அளித்துள்ளார் . பாஜ விடம் அதிமுக அடிபணிந்து அரசு நடத்துவதாக திமுக குற்றஞ்சாட்டி வருகிறது. அதிமுக ஒருபோதும் யாரிடமும் அடிபணியாது. திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இலங்கை தமிழர்கள் ஒன்றரை கோடி கொன்று குவிக்கப்பட்டனர். நாட்டுக்கு துரோகம் செய்த கட்சி திமுக. முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி மிகச்சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார். துணைமுதல்வர் யாருக்கும் துரோகம் நினைக்காதவர்’ அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் ‘ என ஆவேசமாக பேசி முடித்தார்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









