வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..

2019-2020ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் 08-02- 2019 அன்று தாக்கல் செய்தார்.

இதில் குறிப்பாக வரும் நிதியாண்டில் பள்ளி கல்வித்துறைக்கு 28,757.62 கோடிகள் அறிவித்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றிய பொழுது தமிழக 2019-2020 பட்ஜெட்டை பற்றி பேசியபோது கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தவறுதலாக கூறியதால் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!