சிவகாசி :மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில், முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் வீர முழக்கத்தை கேட்க, விருதுநகர் மாவட்ட தொண்டர்கள் அணி திரண்டு செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பேசும்போது, வரும் 20ம் தேதி (ஞாயிறு கிழமை) அதிமுக கட்சியின், ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரை மாநகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து, சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மதுரை மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடியாரின் வீர முழக்கத்தை கேட்பதற்காக அதிமுக தொண்டர்கள் அணி திரண்டு செல்ல வேண்டும். தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் படை எடுத்து வர வேண்டும்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் சரியாக செய்ய வேண்டும். அதிமுக கட்சியை குறைத்து எடை போடுபவர்களுக்கு, இந்த எழுச்சி மாநாடு பதில் கூறுவதாக இருக்க வேண்டும். எனவே அதிமுக தொண்டர்கள் மதுரை மாநாட்டில் உற்சாகத்துடனும், உணர்வுடனும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில், திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பாபுராஜ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், மாநகர இளைஞரணி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









