முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சித்தால் பெரிய ஆளாகி விடலாம் என எண்ணுகிறார்கள்… அமைச்சர் பேச்சு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில்  255 மகளிர் குழுக்களுக்கான கடனுதவி 1 கோடி 74 லட்சம்   வழங்கும் விழாவை தொடக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் கூறுகையில்,  கொரானவை கட்டுபடுத்தும் அரசாக, மத்திய மாநில அரசுகள் உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் கூட நாடகம் ஆடுகிறார்கள்.நாடு முழுவதும் குடிநீர் பிரச்சனை இல்லை – மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை இல்லை. முதல்வரை குறை கூறினால் நாம் பெரிய ஆளாகி விடுவோம் என நினைக்கிறார்கள் – குளிர் காய நினைக்கிறார்கள்.

தெலுங்கானா  ஆந்திரா போன்ற மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது .இக்கட்டான சூழ்நிலையில் கரம் கோர்க்காமல் இழிவு படுத்தும் நிலை வெளிமாநிலத்தை விட தமிழகத்தில் தான் உள்ளது – அவர்களை மன்னிக்கவே முடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தொற்றை பரப்பவில்லை – புனே, பம்பாய், கொல்கத்தா என வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் பரப்பிவிட்டார்கள். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!