இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல – தவெக தலைவர் விஜய்க்கு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டமான பதில்..
தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது, முன்னேறியிருப்பதற்கு காரணமே திராவிட இயக்கங்கள்தான். ஒன்றிய அரசு தற்போதுதான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த இலக்கு வைத்து முயற்சித்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அந்த இலக்கை எப்போதோ எட்டிவிட்டது. காரணம், தமிழ்நாட்டில் இருந்த திராவிட ஆட்சிகள்தான்.
திராவிட இயக்கங்கள் குறித்து குறை சொல்ல எவருக்கும் யோக்கியதை இல்லை – எஸ்.எஸ்.சிவசங்கர்.
இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல, அரசியல்.
மக்கள் பிரச்சினைக்காக போராடிய இயக்கம், இரத்தம் சிந்திய இயக்கம் இன்று ஆட்சியில் இருக்கிறது எனில் மக்கள் உணர்வை புரிந்துகொண்ட காரணத்தினால்தான்.
நீட் தேர்வு இருக்கும்வரை அதை எதிர்த்து திமுக போராடும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்திலேயே தெரிவித்துள்ளார். – எஸ்.எஸ்.சிவசங்கர்.
You must be logged in to post a comment.