பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நிலையில், அவர் முதல்வரை சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.செந்தில் பாலாஜி தவிர அமைச்சர்களும் உடன் இருந்து முதலமைச்சரை வரவேற்றனர்.

You must be logged in to post a comment.