கொரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்டுபிடிப்பை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு..

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆரோக்கியதாஸ் கொரோனா தொற்று மனிதருக்கு இருக்கிறதா என்பதை கண்டறிந்து அவர்களுக்கு எந்த அளவு கொரோனா வைரஸ் உடலில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கக்கூடிய கருவியை உருவாக்கி வருகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பில் 3துறைகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவின் தலைமையாக இயற்பியல் துறை பேராசிரியர் ஆரோக்கியதாஸ் மற்றும் அவருடன் இணைந்து உயிரியல் தொழில்நுட்ப துறை பேராசிரியர்கள் அசோக்குமார் மற்றும் வரலட்சுமி ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கருவி கொரோனா நோய்த்தொற்றை கண்டறிய வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் போன்ற அமைப்பை உடையதாக உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு ரத்தம், சளி ஆகியவற்றைக் கொண்டு கொரோனா நோய்தொற்று இருப்பதை கண்டறிய முடியும் மேலும் உடலில் எந்த அளவு கொரோனா நோய் தொற்று இருக்கிறது என்பதையும் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த கண்டுபிடிப்பை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு செய்தார். கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்ல கூடிய அனைத்து உதவிகளையும் சுகாதாரத் துறை மூலமாக பேராசிரியர்களுக்கு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!