இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம்ä குண்டாறு வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் கிராமத்திலுள்ள கண்மாயில் 30.06.2018 அன்று பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை (குண்டாறு வடிநிலக் கோட்டம்) யின் சார்பாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் சீரமைப்புப் பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசியதாவது: தமிழ்நாடு அரசு தமிழகத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்து, எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகளவில் மழைநீரை சேமித்திட ஏதுவாக பண்டைய ‘குடிமராமத்து” திட்டத்திற்கு புத்துயிர் அளித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில், குண்டாறு வடிநிலக்கோட்டம் கட்டுப்பாட்டின் கீழ் 15 கண்மாய்கள் ரூ.6.81 கோடி மதிப்பீட்டிலும் பரமக்குடி கீழ்வைகை வடிநிலக் கோட்டக் கட்டுப்பாட்டில் மொத்தம் 37 கண்மாய்கள் ரூ.20.72 கோடி மதிப்பீட்டிலும், மணிமுத்தாறு வடிநிலக்கோட்டம், தேவக்கோட்டை கட்டுப்பாட்டின் கீழ் 1 கண்மாய் ரூ. 0.52 கோடி மதிப்பீட்டிலும், முன்னாள் ஜமீன்தாரர்கள் கண்மாய் கோட்டம், காரைக்குடி கட்டுப்பாட்டின் கீழ் 5 கண்மாய்கள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், சிறப்பு திட்டக் கோட்டம், மானாமதுரை கட்டுப்பாட்டின் கீழ் பரமக்குடி வட்டத்தில் 6 கண்மாய்கள் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 64 கண்மாய்களில் ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன்படி இன்றைய தினம் முதுகுளத்தூர் வட்டம் திருவரங்கம் கிராமத்திலுள்ள கண்மாயில் ரூ.37.50 இலட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இக்கண்மாயில் மட்டும் 2,060 மீ நீளத்திற்கு கரை பலப்படுத்துதல், 2 மதகுகள் மறுகட்டமைப்பு செய்தல், வரத்க்குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் கரையினை பலப்படுத்துதல், வரத்துக்கால்வாயில் 800 மீ நீளத்திற்கு சீர்செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் இக்கண்மாய் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 62.84 ஹெட்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர்கள் ஆர்.விஸ்வநாத் (குண்டாறு கோட்டம்) கே.வெங்கட கிருஷ்ணன் (கீழ வைகை கோட்டம்) உதவி செயற்பொறியாளர் எஸ்.குணசேகரன், உதவிப் பொறியாளர்கள் சுரேஷ்குமார், கண்ணன், ண்டபானி உள்பட அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











