இராமநாதபுரம் மாவட்டம் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்திட ரு.11.26 கோடி மதிப்பில் 396 புதிய குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் 107 இடங்களில் ஆர்ஓ பிளாண்ட் அமைக்கப்பட உள்ளன என தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலர் கக்ஷட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கக்ஷட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அரசு முதன்மை செயலளர் பி.சந்திரமோகன் முன்னிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் நடராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடன் தெரிவித்ததாவது:
இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கக்ஷட்டம் நடந்தது. மாவட்டத்தில் தற்போதுள்ள வறட்சியான சுழ்நிலையில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வினிேயாகம் செய்திட ஏதுவாக நடபாண்டு நிதியாண்டில் இதுவரை ரு.11.26 கோடி மதிப்பில் 396 குடிநீர் திட்டபணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 187 பணிகள் நிறேவற்றப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் நிலத்தடி நீர் உப்புத் தன்மை கொண்டதாக உள்ள கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 107 இடங்களில் உப்பநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் 33 இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் திருவாடானை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தீவிர ஆய்வு செய்யப்பட்டு ஆயிரத்து 200 அடிக்கு கீழ் நல்ல குடிநீர் கிடைப்பதை கண்டறிந்து அவ்விடங்களில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வினிேயாகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்திடும் வகையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரு.70 லட்சம் மதிப்பில் 99 ஊரணிகளும், நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரு.20.15 கோடி மதிப்பில் 53 கண்மாய்களிலும், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.2.66 கோடி மதிப்பில் 76 ஊரணிகள், 77 கண்மாய்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரு.31.20 கோடி மதிப்பில் 64 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளன. மேலும் மாவட்டத்தில் சற்றுலா வளர்ச்சியினை மேம்படுத்திடும் விதமாக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரு.15.86கோடி மதிப்பிலும் ராமாயண சர்க்யுட்ட திட்டத்தின் கீழ் ரு.6 கோடி மதிப்பிலும் மேம்பாட்டு பணிகளுக்கு புர்வாங்க பணகள் முன்னேற்றத்தில் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் அரசு சட்டக்கல்லுாரி துவங்கப்பட்டு தற்போதைய சுழ்நிலையல் தற்காலிக கட்டடத்தில்செயல்பட்டு வருகின்றது. இக்கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக போதுமான அளவு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டமான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதேபால் தகவல் தொழில்நுட்பத்துறை முலம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப புங்கா அமைக்கப்பட உளளது.ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய கிராம பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் புதிய அரசு கலைக்கல்லுாரி அமைத்திட வேண்டும் எனவும், ராமநாதபுரம் நகர்பகுதியில் அரசு அலுவலர்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அமைதிட்ட வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தகவல்தொழில்நுட்ப புங்கா அமைத்திடவும், ராமேஸ்வரம் பகுதியில் புதிய கலைக்கல்லுாரி அமைத்திடவும் ராமநாதபுரம் பகுதியில் புதிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டிடவும் தேவையான இவசதியினை தேர்வு செய்து தயார் நிலையில் இருந்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மழைக்காலத்தில் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு முன்னதாக அமைச்சர் சமுக நலத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரங்களையும், தமிழ்நாடு முதலமைச்சரரின் இண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு முதிர்வு தொகையாக ரு.13.70 லட்சம் மதிப்பிலான காசோலையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்திட ஏதுவாக சம்பந்தப்பட்ட 11 ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடத்தில் மொத்தம் ரு.26.75 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹென்சிலீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன்,ராமநாதபுரம் ஆர்டிஓ (பொறுப்பு) அமிர்தலிங்கம் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












