இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி குந்துகால் மீனவ கிராமத்தில் 16.06.2018 அன்று அமைச்சர் மாண்புமிகு டாக்டர்.எம்.மணிகண்டன் மீன் இறங்குதளத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தும் நெருக்கடியை குறைக்கும் வகையில் புதியதாக ரூ.70 கோடி மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பேசியதாவது, “
மீனவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிடும் விதமாக மீனவர்களின் உற்ற நண்பனாக, அவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு மீனவர் நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் சுமார் 16500 எண்ணிக்கையிலான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். பெரும்பாலான மீனவ படகுகள் இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு வருவதால் அருகாமையில் உள்ள கச்சத்தீவு வரை சென்று மீன்பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் மீனவ மக்கள் மீன்பிடித் தொழில் செயவ்தில் பெரும் சிரமத்தை அன்றாடம் சந்தித்து வருகின்றனர்.
இத்தகைய நெருக்கடியினை குறைத்திடும் விதமாக இன்றைய தினம் பாம்பன் ஊராட்சியில் உள்ள குந்துகால் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பில் புதியதாக மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதன்மூலம் மீனவ மக்கள் சுமார் 450 மீன்பிடி படகுகளை இங்கு நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னாள் குந்துகாலில் ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.200 கோடி மதிப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியோடு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனால் மீனவர்கள் எல்லை தாண்டி கச்சத்தீவு வரை சென்று மீன்பிடிக்கும் சிரமங்களும் மற்றும் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களும் வெகுவாக குறைந்து, மீன்பிடி தொழிலினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு வழிவகை ஏற்படும்.
மேலும் இப்பகுதியினை சுற்றுலா தளமாக மாற்றிடும் வகையில், சுற்றுலா துறையின் சார்பாக மத்திய அரசின சுதேஷி தர்ஷன் என்ற் திட்டத்தின் கீழ் ரூ.4.5 கோடி மதிப்பில் ஒளி-ஒலி காட்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளன. இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நலனுக்காக ரூ.113.90 கோடி மதிப்பில் மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு மீனவர்களின் பயன்பாட்ட்டிற்கு கொண்டுவரப்படும். எனவே இனிவரும் காலங்களில் மீனவர்களின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்புடன் அவர்களின் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம்” என அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சிநில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் மணிகண்டன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, செயற்பொறியாளர் முத்துகுமார், உதவி செயற்பொறியாளர்கள் நாகரத்தினம், சிவக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












