வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகள் அனைவருக்கும் ரூ 2 ஆயிரம் சிறப்பு நிதி: அமைச்சர் மணிகண்டன் பேச்சு..

இராமநாதபுரம் நகர் அதிமுக., சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. நகர் செயலாளர் அங்குச் சாமி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் செ. முருகேசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், நகர் துணை செயலாளர் ஆரிபு ராஜா உள்பட பலர் பேசினர்.

விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன் பேசியதாவது: இராமநாதத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி அறிவிப்பு வரும் நாள் தான் ராமநாதபுரம் மக்களுக்கு தீபாவளி. ஊராட்சி சபை கூட்டம் நடத்தி ஸ்டாலின் கோமாளித்தனம் செய்து வருகிறார். அச்சுந்தன் வயல் – பட்டணம் காத்தான் வரை மத்திய அரசு நிதி ரூ.34 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை, ராமநாதபுரம் நகரில் ரூ.17 கோடி மதிப்பில் அனைத்து சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பயிர் காப்பீடு நிதி குறித்து திமுக., உள்பட இதர கட்சிகள் தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மின் மோட்டார் மூலம் காவிரி குடிநீரை திருடுவோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க அரசு நடவடிக்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 65 லட்சம் ஏழை , எளிய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி அறிவித்தார். மாநிலம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி கட்டாயம் வழங்கப்படும். 39 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கியுள்ளோம். 15.50 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப் வழங்கும் பணி இன்று (27/02/2019) துவக்கி வைக்கப்படுகிறது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் அதிமுக, பாஜக, பாமக இயற்கை கூட்டணி அமைந்துள்ளது.

எங்கள் அணிக்கு தேமுதிக வர உள்ளது. வந்தால் சந்தோஷம். புதிய தமிழகம், தமாகா உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர போகிறது. எங்கள் கூட்டணியை கண்டு எதிர்கட்சிகள் திக்குமுக்காடி வருகின்றன. ஸ்டாலினை முதல்வராக விடவே மாட்டோம். தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் 21 தொகுதிகளிலும் அதிமுக நிச்சய வெற்றி பெறும். ஜெயலலிதா மரணத்திற்கு முழு காரணம் திமுக தான். திமுக., காங்., கூட்டணி மக்கள் வெறுக்கும் கூட்டணி . அந்த கூட்டணிக்கு வைகோ சமாதி கட்டி விடுவார். சினம் கொண்ட சிங்கமான அதிமுக தொண்டர்கள் மதம் கொண்ட யானையான திமுகவை தோற்கடிக்க வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!