இராமேஸ்வரத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்திற்கான ரூ.6.8 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (16.12.18) நடைபெற்றது. இந்த விழாவிச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற பொறுப்பு நீதிபதியான ஆர்.சுப்ரமணியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் எம்.மணிகண்டன் உடனிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன்பேசும்போது இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதனடிப்படை சட்டத்தின் ஆட்சி செய்ய வேண்டும். என்றால், அதற்கு உறுதுணையாக மூன்றாவது தூணான நீதித்துறை உள்ளது. நீதித் துறை வலுவிழந்தால் ஜனநாயகம் வலுவிழந்து விடும். ஆகையால் சட்டத்தின் உன்னத பணியை கருத்தில் கொண்டு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இரு கரங்களாக செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசும்போது கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் சட்டகல்லூரி துவங்கப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சிறிய பள்ளி கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சட்டக்கல்லூரி கட்டுவதற்கு 77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மகளிர் நீதிமன்றம் வரவுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் விரைவில் வெளியிடவுள்ளது. மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளேன். இராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்க கச்சத்தீவை மீட்க சட்டபோராட்டம் நடத்திவருகிறோம். ராமேஸ்வரத்திற்கு வருடத்திற்கு 1கோடிக்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். மவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வந்து செல்ல உச்சிப்புளி பருந்து கடற்படை விமானம் தளத்தை விரிவாக்கம் செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையமாகவும் செயல்பட அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளேன் என பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.கயல்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, தலைமை குற்றவியல் நடுவர் எம்.சிவபிரகாசம், மதுரை மண்டல தலைமை பொறியாளர் (கட்டடங்கள்) ஜெ.ரபிந்தர், பொதுப்பணி துறை மதுரை சரக கட்டடங்கள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மேற்பார்வை பொறியாளர் என்.செல்வராஜ், ராமேஸ்வரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர். ஜோதி முருகன், செயலாளர் ஜி.பிரபாகர், ராமநாதபுரம் அரசு வழக்கறிஞர் கே.என். கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











