இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகேயுள்ள குந்துகால் மீனவ கிராமத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்திடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியோடு மீனவர்களுக்கு தலா ரூ.80 இலட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்பின் மேடையில் பேசிய அமைச்சர், “கடந்த அம்மா ஆட்சியில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் மீனவர்களை கண்டு கொள்வதில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்திவந்த நிலை, தற்போது என்னால் அந்த நிலை மாறிவிட்டது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பழுதான படகுகளுக்கு என்னுடைய முயற்சியில் தலா ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக கருதி அவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இலங்கை கடல் பகுதிக்குள் மீனவர்கள் செல்லாமல் நமது இந்திய எல்லையிலேயே மீன்பிடிக்க வேண்டும் என அமைச்சர் மீனவர்களுக்கு அறிவுறுத்தினார்
ராமேஸ்வரத்தில் 292 மீனவர்களுக்கு சேமிப்பு நல நிவாரண நிதியை ராமேஸ்வரம் மீன் துறை அதிகாரிகள் வழங்காமல் காலம் கடத்திவருவதற்க்கு கடும் கண்டனம தெரிவித்ததோடு, அதிகாரிகள் தங்களது பாக்கெட்டில் இருந்து கொடுப்பதில்லை ஆகவே அரசு நலத்திட்டங்களை மக்களுக்கு சிரமம் இன்றி சென்றடைந்தால்தான் அரசுக்கும் தொகுதி சட்டமன்ற உறுபினர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார்.
மேலும் பேசிய அவர், ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் எனது பேச்சைக்கேட்பது மட்டும்மின்றி என்னை ஒரு அமைச்சராகவே மதிப்பதில்லை என்றார். விரைவில் ராமேஸ்வரத்தில் ஒரு அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அனைத்து இறால் பண்ணைகளை விரைந்து அகற்ற மாட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாக பேசினார்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார், மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் திட்டவிளக்கவுரை ஆற்றினார்.
அரசு விழாவில் அரசு அதிகாரிகளையே குற்றம் சாட்டுவதும், மற்ற துறை அமைச்சர்களை மட்டம் தட்டி பேசுவதும், அமைச்சர் மணிகண்டனே இராமநாதபுரத்தின் அனைத்து துறைக்கும் அமைச்சர் என்ற போக்கில் பேசுகிறார் என அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












